எங்களைப்பற்றி

கிறிஸ்துவின் உபதேசங்களில் இருந்து வழுவிப்போகாமல், பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படும் ஒரே சபையாகிய கிறிஸ்துவின் சபையில் உறுப்பினர்களாக உள்ள எக்லேஸியா எனப்படும் சபையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மனிதரிடத்தில் தோன்றும் எந்த உபதேசத்தையும் ஏற்றுக்கொள்வது இல்லை. உபதேசம், கட்டளை மற்றும் படிப்பினை என்ற விஷயங்களை நாங்கள் பின்வரும் கேள்விகளைக் கொண்டு சோதிப்பது கிறிஸ்துவின் சபையாராகிய எங்கள் வழக்கமாக உள்ளது.

(1) இது தேவனிடத்தில் இருந்து வந்ததா?

(2) இது கிறிஸ்துவினால் கட்டளையிடப்பட்டதா?

(3) இது அப்போஸ்தலர்களால் உபதேசிக்கப்பட்டதா?

(4) இது ஆதிக்கிறிஸ்தவர்களால் பின்பற்றப்பட்டதா?

(5) இது எதைப்பற்றி அல்லது யாரைப்பற்றிப் பேசுகிறது?

(6) இது உரைக்கப்பட்ட சந்தர்ப்பப்பொருள் என்ன?

(7) இது நமக்கு நேரடியான கட்டளையா?

(8) இது நமக்கு படிப்பினையாகத் தரப்பட்டுள்ளதா?

(9) இது இன்றைய நாட்களில் நம்மை எவ்வாறு செயல்படச் செய்கிறது?

மேற்கண்ட கேள்விகளிலேயே நமக்கு ஒரு உபதேசம் அல்லது கட்டளை அல்லது படிப்பினையின் தன்மை புரிந்துவிடும். அது தேவனால் வந்தது என்றால் நாம் கட்டாயம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மனிதரால் வந்தது என்றால் நாம் கட்டாயம் அதை புறக்கணிக்க வேண்டும்.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியங்கள்

நன்கொடை / ஆதரவு

உலகளாவிய வகையில் செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் உலக மக்கள் எல்லோரையும் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியாகும்.

தமிழ்