ஜோசரா வேதாகம விளக்க உரைகள்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியங்கள்

 ஜோசரா வேதாகம விளக்க உரைகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

ஜோசரா வேதாகம விளக்க உரைகள்

இணையத்தைப் பயன்படுத்தும் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் சென்றடையும் நோக்கத்துடன், இந்த எளிமையான ஆனால் உண்மையுள்ள முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தை எல்லாவற்றிலும் வல்லமை வாய்ந்தது. நாம் உயிருள்ள மற்றும் அன்பான தேவனை பிரியப்படுத்த விரும்பினால், நாம் வேதாகமத்தைச் சரியான அர்த்தத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த விளக்கவுரையில் தேவன் உத்தேசித்துள்ளபடி வேதாகம வசனங்களின் பொருளை விளக்க எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் நம்மை ஒருபோதும் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லாது. எனவே இந்த விளக்கவுரையில் அவ்வகையான கோட்பாடுகள் யாவும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படுகின்றன. அனைத்து விளக்கங்களும், வரலாற்று மற்றும் புவியியல் பின்னணியுடனும் வேதாகமத்தில் இருந்தே பிற நிரூபண வசனங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விளக்கவுரைகளை முடிந்தவரை விலைமதிப்பற்றதாக வெளிக்கொணர ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டாலும், ஏதேனும் தவறுகள் அல்லது தவறவிட்ட கருத்துக்களை நீங்கள் கண்டால், மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

ஆர்.சி. ஜோசப் சகாயராஜ், கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துவின் சபையில் தன்னார்வ ஊழியராக – போதகராகப் பணிசெய்து வருகிறார். ஆசிரியப்பணி மற்றும் மொழிபெயர்ப்புப் பணிமூலம் பெறுகிற வருமானத்தில் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். இவர் நான்கு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்: ஒன்று ஆங்கிலத்தில், ஒன்று தத்துவம் மற்றும் மதங்களில், ஒன்று கல்வியிலில் மற்றும் இன்னொன்று இறையியலில். வேதாகமத்தைப் பற்றிய இவரது ஆராய்ச்சிக்காக சமீபத்தில் சென்னை நேஷனல் பைபிள் கல்லூரி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் (Ph.D.) வழங்கியது. இந்த விளக்கவுரைகள் எழுதும் பணிக்காக இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் மற்றும் பரிசுத்த புத்தகத்தின் மீது நிறைய ஆராய்ச்சி செய்கிறார். இவருடைய கண்டுபிடிப்புகள் பிரசங்கியார்களுக்கு அவர்களின் பிரசங்கத்தை செம்மைப்படுத்தவும், விசுவாசிகளுக்கு அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்தவும், விசுவாசிகள் அல்லாதவர்கள் வேதாகமத்தின் உண்மைகளை அறிந்து, உயிருள்ள தேவனை நோக்கி வரவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

தமிழ்