FCCR Ministries International

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியங்கள்

சபை வரலாறு

சபை என்ற வார்த்தையின் உண்மையான பொருள்: கிரேக்க மொழியில் உள்ள Εκκλησία (Ekklesia) எக்லேஸியா என்ற வார்த்தையே சபை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றுகூட்டப்பட்ட மக்கள் என்று அர்த்தப்படுகிறது. இதில் உள்ள எக் என்ற வார்த்தை வெளியே என்றும், கலேஸியா என்ற வார்த்தை அழைக்கப்பட்ட மக்கள் என்றும் பொருள்படுகின்றன. எனவே எக்லேஸியா என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றுகூட்டப்பட்ட மக்கள் என்ற அர்த்தம் தருகிறது. இது ஆங்கிலத்தில் சர்ச் என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மக்கள் கூட்டம்தான் சர்ச் எனப்பட முடியும். மக்கள் கூடிவரும் இடம் சர்ச் ஆகாது. கிறிஸ்தவ வட்டாரத்தில் சபைகூடிவரும் இடம் சர்ச் என்று அழைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இது தவறு. கூடிவரும் இடமானது, சபை கூடும் இடம் என்றுதான் அழைக்கப்படவேண்டும். கூடிவரும் மக்கள் தான் எக்லேஷியாவாக சபையாக சர்ச் ஆக இருக்கின்றோம்.

எங்களைப்பற்றி

கிறிஸ்துவின் உபதேசங்களில் இருந்து வழுவிப்போகாமல், பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படும் ஒரே சபையாகிய கிறிஸ்துவின் சபையில் உறுப்பினர்களாக உள்ள எக்லேஸியா எனப்படும் சபையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மனிதரிடத்தில் தோன்றும் எந்த உபதேசத்தையும் ஏற்றுக்கொள்வது இல்லை. உபதேசம், கட்டளை மற்றும் படிப்பினை என்ற விஷயங்களை நாங்கள் பின்வரும் கேள்விகளைக் கொண்டு சோதிப்பது கிறிஸ்துவின் சபையாராகிய எங்கள் வழக்கமாக உள்ளது.

ஜோசரா வேதாகம விளக்க உரைகள்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியங்கள்

 ஜோசரா வேதாகம விளக்க உரைகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை மீளக்கட்டும் ஊழியங்கள்

நன்கொடை / ஆதரவு

உலகளாவிய வகையில் செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் உலக மக்கள் எல்லோரையும் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியாகும்.

விளக்கவுரையாளரிடம் இருந்து கடிதம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

 நான் கடந்த 30 வருடங்களாக கிறிஸ்துவ சபையில் தன்னார்வ ஊழியம் செய்து வருகிறேன். பிரசங்கம் செய்தல், போதித்தல் மற்றும் மொழிபெயர்ப்பதில் எனது அனுபவத்தைக் கொண்டு, வேதாகமத்தின் புத்தகங்களுக்கு எனது சொந்த விளக்கவுரைகளை எழுத ஆரம்பித்தேன். இது ஒரு எளிய கேள்வி-பதில் வடிவத்தில் உள்ளது. இதைப் படிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் எவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தேவனுக்குள் நான் ஒரு உறுதிப்பாட்டகி கொண்டுள்ளேன்: ஒவ்வொரு நாளும் எனது முதல் கடமை வேதாகமத்தின் ஒருசில வசனங்களுக்கு விளக்கம் எழுதுவது. இவ்வாறாக, இந்த பூமியில் எனது வாழ்க்கைப் பயணத்தை முடிப்பதற்கு முன், வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் விளக்கவுரையை எழுதி முடிக்க விரும்புகிறேன்.

தன்னார்வப் பணிப் பொறுப்புக்கள்

இந்த ஊழியம் உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் எங்களுக்குத் தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். இந்த விளக்கவுரைகள் ஆங்கிலம் மற்றும் உங்கள் தாய்மொழி ஆகியவற்றில் இணை உரையாக உங்களுக்கு அனுப்பப்படும். அதில் உங்கள் தாய்மொழியில் உள்ளவற்றை நீங்கள் வாசித்து திருத்தி எங்களுக்கு அனுப்ப வேண்டும். பின்பு அவைகள் உங்களது மொழியில் இந்த வெப்சைட்டில் பதிவுசெய்யப்படும்.

தமிழ்